வியாழன், 10 ஜனவரி, 2013

குழந்தைகள் நல்ல மொழுமொழுவென குண்டாக இருக்க வேண்டும் என்பதை மாற்றிக் கொள்ளுங்கள்!



Friday  11  January  2013
குழந்தைகள் நல்ல மொழுமொழுவென குண்டாக இருக்க வேண்டும் என்பதை மாற்றிக் கொள்ளுங்கள்!
குழந்தைகள் நல்ல மொழுமொழுவென குண்டாக இருக்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புகின்றனர். அப்படி இருந்தால் தான் அவர்கள் ஆரோக்கிமாக இருக்கின்றார்கள் என தப்பாக எண்ணுகின்றனர். அதற்காக அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான உணவுகளை கொடுக்கின்றனர். அது தவறான ஒரு பழக்கமாகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.பொதுவாக ஒரு குழந்தைப் பிறந்து 6 மாதங்கள் வரைக்கும் கட்டாயம் தாய் பால்தான் கொடுக்க வேண்டும். காரணம் தாய் பாலினை ஈடு செய்வதற்கு உலகில் எதுவுமே இல்லை. எனவே முடியுமான வரைக்கும் தாய் பாலை வழங்குதவதற்கு முயற்சி செய்யுங்கள். தாய் பாலில் தான் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான விற்றமின்களும் கனியுப்புக்களும் அளவான வீதத்தில் இருக்கின்றன. அத்துடன் தாய் பாலில் அதிகமான இரும்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் காணப்படுகின்றன.

புதன், 9 ஜனவரி, 2013

படுக்கை அறையிலேயே எத்தனை நாளைக்குத்தான்: கணவருக்கு எந்த இடம் பிடிக்கும்!



Thursday  10  January  2013  
படுக்கை அறையிலேயே எத்தனை நாளைக்குத்தான்
இயந்திரத்தனமான வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவர்களை உயிர்போடு வைத்திருப்பதே ரொமான்ஸ் நினைவுகளும் ரொமான்ஸ் செயல்பாடுகளும்தான். இல்லற வாழ்க்கையில் சின்னச் சின்ன ரொமான்ஸ் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்.

கணவருக்கு பிடித்த மாதிரியான செயல்பாடுகளை மனைவி செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதே நிபுணர்களின் கருத்து.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?



Thursday  10  January  2013  
ரத்தம் எவ்வாறு குரூப் வாயாகரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு.

‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும்.

AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”





 உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்” – அறிந்து கொள்வோம்
பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும். நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு ஆகின்றது.

சனி, 5 ஜனவரி, 2013

செக்ஸ் என்பது சிறந்த உடற்பயிற்சி - தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும்!



Sunday  06  January  2013
செக்ஸ் என்பது சிறந்த உடற்பயிற்சி
உலகமே காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பிக்க முடியாமல் தடுமாறிய கதைகளும் உண்டல்லவா. சிறு உயிர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை அனைவரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.